சூரரைப் போற்று திரைப்படத்தின் இந்தி ரீமேக்கின் ஷூட்டிங் இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில் படக்குழுவினருக்கு சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. சூர்யா கேரக்டரில் அக்சயகுமார் நடிக்க இருப்பதாகவும் அபர்ணா பாலமுரளி கேரக்டரில் ராதிகா மதன் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பதாகவும் இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் இந்தி படம் இது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைக்கபோவது யார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழுக்கு இசையமைத்த ஜி வி பிரகாஷே இந்தி படத்துக்கும் இசையமைக்க உள்ளதை அறிவித்துள்ளார். கேங்ஸ் ஆஃப் வாசிபூர் படத்துக்குப் பின்னர் ஜி வி பிரகாஷ் இந்தி படத்துக்கு இசையமைக்க உள்ளார்.
இ ந்நிலையில் சூரரைப் போற்று இந்திப் படத்தின் ரீமேக் பணிகளை பார்வையிட இன்று சூர்யா மும்பைக்குச் சென்றார். அப்போது, ஹீரோ அக்ஷய்குமார், நடிகை ராதிகா மதன், இயக்கு நர் சுதா கொங்கராவை நேரில் சந்தித்து வாழ்ந்த்தினார். இந்தச் சந்திப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் சூர்யா. இது வைரலாகி வருகிறது.