6 மொழிகளில் கிளிம்ப்ஸ் ஆப் கங்குவா வீடியோ: தேதி அறிவிப்பு..!

சனி, 22 ஜூலை 2023 (16:40 IST)
சூர்யா நடித்து வரும் கங்குவா என்ற திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நாளை ஆறு மொழிகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நாளை அதிகாலை 12.01 மணிக்கு சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த வீடியோ தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
 நாளை சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த வீடியோ வெளியாவதால் அவரது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
சூர்யா, திஷா பதானி, நட்டி நடராஜ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் என்பதும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்