‘ரெட்ரோ’ பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா…!

vinoth

செவ்வாய், 29 ஏப்ரல் 2025 (09:32 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா ஆகியோருடன் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படம் வரும் வியாழக் கிழமை ரிலீஸாகவுள்ளது.

இதையடுத்துப் படத்தின் ப்ரமோஷன் பணிகளை பல இடங்களில் மேற்கொண்டு வருகிறார் சூர்யா. இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் பேசும்போது தனது சமீபத்தையப் படமான ‘கங்குவா’ தோல்வி குறித்து சூசகமாகப் பேசியுள்ளார்.

அவரது பேச்சில் “குத்துச்சண்டை போட்டியில் நாம் அடிவாங்கி விழும் போது தோற்பதில்லை. ஆனால் நான் எழ மறுக்கும்போதுதான் தோற்கிறோம். மீண்டு வருவோம். ஒரு வலுவான அடி கொடுப்போம். ரெட்ரோ படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்”எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்