இதுதான் ‘வாடிவாசல்’ சூர்யா கெட்டப்பா? வைரலாகும் புகைப்படம்!

ஞாயிறு, 18 அக்டோபர் 2020 (16:55 IST)
இதுதான் ‘வாடிவாசல்’ சூர்யா கெட்டப்பா? வைரலாகும் புகைப்படம்!
சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் வரும் 30ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படமான ‘வாடிவாசல்’ திரைப்படம் அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது
 
இந்த படத்தின் படப்பிடிப்பிற்கான ஆரம்பகட்ட பணிகள் அனைத்தையும் இயக்குனர் வெற்றிமாறன் முடித்து விட்டதாகவும் அடுத்த மாதம் தொடங்கும் படப்பிடிப்பு வரும் டிசம்பருக்குள் முடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யாவுக்கு வித்தியாசமான கெட்டப் என ஏற்கனவே செய்திகள் வெளியானது. அதனால்தான் அவர் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் தன்னுடைய கெட்டப்பை வெளியே காட்டாமல் ரகசியமாக மறைத்து வருகிறார் என்றும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது இணையதளத்தில் அவருடைய ‘வாடிவாசல்’ கெட்டப் புகைப்படம் கசிந்துள்ளது. நீண்ட தலைமுடியுடன் தாடியும் வைத்திருக்கும் கேட்டப் தான் ‘வாடிவாசல்’ திரைப்படத்திற்கான சூர்யாவின் கெட்டப் என்பது அந்த புகைப்படத்தில் இருந்து தெரிய வருகிறது
 
இந்த புகைப்படத்தை சூர்யா ரசிகர்கள் உள்பட நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்