டிசம்பரில் பாலா சூர்யா திரைப்படம் தொடக்கம்!

சனி, 9 அக்டோபர் 2021 (15:27 IST)
இயக்குனர் பாலாதான் தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு என்று நந்தா படத்தின் மூலமாக ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். அதன் பின்னர் அவர் இயக்கிய பிதாமகன் படத்திலும் சூர்யாவுக்கு ஒரு முக்கியமான வேடத்தைக் கொடுத்து அவரிடம் இருந்த நகைச்சுவை நடிப்பையும் வெளிக்கொண்டு வந்தார். இதனால் சூர்யா தனது சினிமா காட்பாதராக பாலாவை நினைத்து வந்தார்.

இப்போது பாலாவுக்கு சினிமாவில் போதாத காலம் என்பதால் அவருடைய இயக்கத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளாராம். இந்த படத்துக்கான வேலைகள் இப்போது பிஸியாக நடந்துகொண்டிருக்கும் நிலையில் படத்துக்கான வசனத்தை எழுதும் பொறுப்பை இயக்குனர் விஜி பெற்றுள்ளாராம்.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. குறுகிய கால படமாக உருவாகும் இதை சீக்கிரமே முடித்து ஓடிடியில் ரிலிஸ் செய்ய பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்