சூர்யாவுடன் இணையும் சுதா: இறுதிச்சுற்று 2ஆம் பாகமா?

செவ்வாய், 4 ஜூலை 2017 (06:47 IST)
மாதவன், ரித்திகா சிங் நடித்த 'இறுதிச்சுற்று' திரைப்படம் தேசிய விருது உள்பட பல விருதுகளை பெற்றுத்தந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் பெண் இயக்குனர் சுதா கொங்கரா, இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும்ம் கூறப்படுகிறது.



 
 
சூர்யா-சுதா இணையும் இந்த புதிய படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மேலும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். சூர்யா படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பது இதுதான் முதல்முறை
 
இந்த நிலையில் இந்த படம் 'இறுதிச்சுற்று 2' என்பதை படக்குழுவினர் முடிவு செய்யவில்லை. ஒருவேளை இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் நிச்சயம் இந்த படத்தின் நாயகி ரித்திகாசிங் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்