9 இயக்குனர்கள் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ்: ஹீரோ இந்த பிரபலமா?

புதன், 25 ஆகஸ்ட் 2021 (17:51 IST)
ஒன்பது இயக்குநர்கள் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ஒன்றை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் உள்ள நிலையில் அந்த படத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
மணிரத்னம், ஷங்கர், முருகதாஸ், வெற்றிமாறன், கவுதம்மேனன், லிங்குசாமி, மிஷ்கின், சசி, வசந்தபாலன், பாலாஜி சக்திவேல் மற்றும் லோகேஷ் ஆகிய ஒன்பது இயக்குநர்கள் இணைந்து ரெயின் ஆன் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிறுவனத்தின் முதல் படத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் இதற்காக சூர்யா ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. சூர்யா மற்றும் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக இணையும் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்