விக்ரம் விஜய் சேதுபதி நடிப்பில் தேவர்மகன் 2? எதிர்பார்ப்பை எகிறவைத்த இயக்குனர்!

புதன், 25 ஆகஸ்ட் 2021 (16:22 IST)
இயக்குனர் மகேஷ் ராகவன் தேவர் மகன் 2 படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.

மலையாள திரையுலகில் படத்தொகுப்பாளராகவும் இயக்குனராகவும் அறியப்பட்டவர் அமல் நீரத். இவர் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தான் கமல் மற்றும் சூர்யா ஆகிய இருவரையும் வைத்து ஒரு திரைக்கதை எழுதியுள்ளதாகவும், அதை இருவரிடம் தனித்தனியாகக் கூறி சம்மதம் வாங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த செய்தி இப்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதே போல அவர் கமல் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதை எழுதி வருவதாகவும் கூறியுள்ளார். அந்த படத்தில் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரையும் நடிக்க வைக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்