புதுக் கதையை அனுப்பிய இயக்குனர் பாலா… சூர்யாவின் ரியாக்‌ஷனுக்காக வெயிட்டிங்!

புதன், 23 நவம்பர் 2022 (15:50 IST)
இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த வணங்கான் திரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடித்து அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 34 நாட்கள் கன்னியாகுமரியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.  படத்தின் டைட்டில் வணங்கான் என்று அறிவிக்கப்பட்டது. இடையில் இயக்குனர் பாலா மற்றும் சூர்யாவுக்கு இடையே எழுந்த மோதல் காரணமாக படம் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இப்போது வணங்கான் திரைப்படத்தின் மொத்தக் கதையையும் இயக்குனர் பாலா மாற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ஏற்கனவே எடுத்தக் காட்சிகள் படத்தில் பயன்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் புதிதாக திருத்தி எழுதிய கதையை இயக்குனர் பாலா, சூர்யாவுக்கு அனுப்பியதாகவும், ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் இன்னமும் வரவில்லை என்பதால் அவர் காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்