பாஜகவின் பெண் நிர்வாகியை சூர்யா சிவா மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர் பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதித்து அண்ணாமலை உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒழுங்கு நடவடிக்கை குழு தனது அறிக்கை சமர்ப்பிக்கும் வரை ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.