கங்குவா மற்றும் சூர்யா 44 ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மிகக் குறுகிய கால படமாக உருவாகவுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு மத்தியில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
டிசம்பர் மாதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதையை சூர்யாவிடம் சொல்லி சம்மதம் வாங்கியது குறித்து ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. அதில் “நான் இந்த கதையை சூர்யா சாரிடம் ஒரு மணிநேரம் சொன்னேன். கேட்டு முடித்ததும் அவர் உடனே நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என்றார். அவர் கடந்த 16 ஆண்டுகளாக எந்த கதையையும் இப்படிக் கேட்டதும் ஓகே சொன்னதில்லையாம். இதை அவரே என்னிடம் சொல்லி இந்த கதையை ஓகே செய்தார்” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் படத்தின் பூஜை கோவையில் வரும் 27 ஆம் தேதி தொடங்கவுள்ளதாம். 28 ஆம் தேதி முதல் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாகவும், அதில் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.