மகிழ் திருமேனி பற்றி அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட அறிவிப்பு!

புதன், 22 பிப்ரவரி 2023 (08:21 IST)
அஜித் 62 படத்தை இயக்க மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் அஜித்தின் மேலாளரும், மக்கள் தொடர்பாளருமான சுரேஷ் சந்திரா சார்பில் வெளியாகியுள்ள அறிவிப்பில் “இயக்குனர் மகிழ் திருமேனி எந்தவொரு சமூகவலைதளத்திலும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். போலிக் கணக்குகளில் இருந்து வெளியாகும் தகவல்களை புறக்கணிக்குமாறு ஊடகங்களை நாம் கேட்டுக் கொள்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்