நண்பரின் மகளுக்கு தந்தையாக மாறிய சூப்பர் ஸ்டார்!

சனி, 23 அக்டோபர் 2021 (15:23 IST)
ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் , இறந்துபோன தனது நண்பரின் மகளுக்கு தந்தையாக இருந்து திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.

ஹாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் வின் டீசல். இவரது ஃபாஸ்ட் அண்ட் ஃபூரியஸ் உள்ளிட்ட ஆக்சன் படங்களுக்கு தனி ரசிகர்கள் வட்டமே உலகளவில் உள்ளனர்.

இந்நிலையில், மறைந்த தனது நண்பரான ஹாலிவுட் நடிகர் பால் வால்கரின் மகள், மியாடோவ் வால்கரின் திருமணத்தில் தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை நடத்திவைத்தார்.  மியாடோவ் வால்கர் தனது காதலரை திருமணம் செய்தது  குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்