சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் , அட்லி இணையும் படத்தின் பெயர் ’ சங்கி’

வியாழன், 31 அக்டோபர் 2019 (20:15 IST)
விஜய் - நயன்தாரா நடிப்பில், அட்லி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான பிகில் படம் தொடர்ந்து சில நாட்களாக வசூல்  குவித்துவருகிறது. இந்நிலையில்  பிகில் படத்திற்கு பிறகு அட்லி ஷாருக்கானை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளதாகவும், அப்படத்துக்கு சங்கி எனப் பெயர் வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
பிகில் படத்தின்  படப்பிடிப்பின்போதும், சரி அதன்பின்னர் அப்படத்தின் புரமோசன் வேலைகளின்போதும் சரி அட்லி , பாலிவுட் சூப்பர் ஸ்டார் அட்லியை வைத்து இயக்குவதாக பேச்சு எழுந்தது.
 
இந்நிலையில், அட்லி ஷாருக்கானை வைத்து படம் இயக்கவுள்ளதாகவும், அப்படத்திற்கு சங்கி எனவும் பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகிறது. 
 
சங்கி என்ற ஹிந்தி சொல்லுக்கு பைத்தியம் என்று பொருளாகும்.மேலும் ஷாருக்கான், அட்லி இணைந்து பணியாற்றும் அடுத்த படம் குறித்த அறிவிப்புகள், வரும் நவம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்