சூப்பர் ஸ்டார் பட டீசர் ரிலீஸ்....சினிமா துறையினர் அதிர்ச்சி...

வெள்ளி, 1 ஜனவரி 2021 (13:25 IST)
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்துவரும் த்ரிஷ்யம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனா நடித்து வருகிறார்.இந்நிலையில் இப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் என மோகன்லால் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜீத்துஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான திரைப்படம் ’த்ரிஷ்யம். இந்த திரைப்படம் தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட்டானது.

இந்த படத்தின் ரீமேக்கில் கமல்ஹாசன் கவுதமி நடித்து இருந்தனர். குடும்பக் கதையம்சம் கொண்ட இப்படம் ரூ.75 கோடி என்ற  மிகப்பெரிய வசூல்  சாதனை படைத்தது.

இந்நிலையில் ’த்ரிஷ்யம் 2’ படப்பிடிப்பு  ஊரடங்கு முடிந்தவுடன் மீண்டும் தொடங்கப்பட்டது. இதில் அனைவரும் தக்க பரிசோதனைகளுடன் படப்பிடிப்பில் கலந்துகொண்டனர்.

எனவே  இப்படத்தின் டீசரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட மோகன்லால், இப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தாலும்  மலையாள திரைப்பட உலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Georgekutty and his family are coming soon on @PrimeVideoIN#Drishyam2OnPrime #HappyNewYear2021 #MeenaSagar #JeethuJoseph @antonypbvr @aashirvadcine @drishyam2movie #SatheeshKurup pic.twitter.com/5l7cfCdCS3

— Mohanlal (@Mohanlal) December 31, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்