பஸ் கண்டெக்டராக இருந்து வந்த ரஜினிக்கு கடவுளின் அற்புத படைப்பாக அவரது ஸ்டைல் அவர் கூடவே பிறந்துவிட்டது. அது தான் அவர் சினிமாவில் நுழைய மிகப்பெரிய உந்துகோலாக அமைந்தது. கடந்த 1975ம் ஆண்டு வெளிவந்த அபூர்வ ராகங்கள் படத்தில் இயக்குனர் கே. பாலசந்தர் தான் ரஜினியை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்து ரசிகர்களுக்கு சிறந்த கலைஞனை கொடுத்தார்.
அந்த படத்தில் கமல் ஹாசனும் நடித்திருப்பார். கமல் , ரஜினியின் நட்பு முதல் படத்திலேயே துவங்கியது. அதனை தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் இன்றைய நாளிலும் அபூர்வ ராகங்கள் படத்தை யாரும் மறந்துவிடமுடியாது.
இந்நிலையில் ரஜினி சினிமாவில் நுழைந்து வருகிற ஆகஸ்ட் 18ம் தேதியோடு (நாளை) 44 வருடம் பூர்த்தி அடைகிறது. இதனை கொண்டாடும் விதமாக ரஜினி ரசிகர்கள் #44YearsofRajinism என்ற பெயரில் ஹேஸ்டேக் உருவாகி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் ரஜினி இதுவரை நடித்து ஹிட் அடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்தின் லுக்கை ஒன்றிணைத்து மாஸான ஒரு போஸ்டரை ரஜினியின் தீவிர ரசிகரான இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உருவாகி வெளியிட்டுள்ளனர்.