இந்த நிலையில் சமீபத்தில் பீச் ஓரத்தில் கவர்ச்சியான உடையை அணிந்த பிரதியின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலானது. இந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சிலர் பிரகதி போதைக்கு அடிமையாகி விட்டதாகவும், பணத்திற்காக அவர் கவர்ச்சியான மாடலிங் செய்யவும் தயாராகி விட்டதாகவும் கருத்துக்களை தெரிவித்தனர். இந்த தகவல் வதந்தியாக மிக வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிரகதி ’இன்டர்நெட்டில் படிக்கும் அனைத்தையும் உண்மை என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். அந்த தகவலை வெளியிட்டவர் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற இழிவான, பயங்கரமான செயல்களில் ஈடுபட வேண்டாம்’ என்றும் பிரகதி கேட்டு கொண்டுள்ளார்.