தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
சமந்தா இந்த கவலையில் இருந்து மீண்டு வர மகிழ்ச்சியான காரியங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். அவரது தோழி ஷில்பா ரெட்டியை அழைத்துக்கொண்டு அடிக்கடி ட்ரிப் சென்று வருகிறார். இந்நிலையில் தற்போது சமந்தாவின் தோழி ஷில்பா ரெட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்து ரசிக்க வைத்துள்ளது.