சிகிச்சை பெற்று வந்த நடிகை சரண்யா சசி காலமானார்

திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (22:17 IST)
சிகிச்சை பெற்று வந்த நடிகை சரண்யா சசி காலமானார்
உடல் நலக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நடிகை சரண்யா சசி காலமானார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
தமிழில் பச்சை என்கிற காத்து மற்றும் மலையாளத்தில் பல படங்களில் நடித்தவர் நடிகை சரண்யா இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு மூளையில் கட்டி இருந்ததை அடுத்து அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதுவரை பதினொரு அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவருக்கு திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டது
 
இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சரண்யா சசி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரது ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்