கலகலப்பு மூன்றாம் பாகத்துக்குத் தயாரான சுந்தர் சி… ஹீரோயின் இவர்தான்!

vinoth

வெள்ளி, 24 மே 2024 (07:11 IST)
சுந்தர் சி இயக்கத்தில் உருவான கலகலப்பு திரைப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு அவர் கலகலப்பு இரண்டாம் பாகத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுத்தார். ஆனால் அந்த படம் முதல் பாகம் போல வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் இப்போது அரண்மனை 4 எடுத்து ரிலீஸ் செய்து அந்த படம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இந்நிலையில் அடுத்து அவர்  கலகலப்பு மூன்றாம் பாகத்தை எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.  இந்த படத்தில் யார் யார் நடிக்க போகிறார்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

ஆனால் முதல் பாகத்தில் நடித்த சிவா மற்றும் விமல் ஆகியோர் நடிக்க உள்ளது உறுதி என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வாணி போஜன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.  அடுத்த மாத தொடக்கத்தில் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்