நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம். ஆனால் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் படம் திரையரங்கில் வெளியாவதையே விரும்புகிறார் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று காலை இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகும் என்று செய்திகள் சமூகவலைதளங்களில் பரவின.
ஆனால் அதையெல்லாம் தயாரிப்பாளர் மறுத்தார். இந்நிலையில் இப்போது திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளோடு இயங்கலாம் என அறிவிக்கப்பட்டு விட்டன. ஆனாலும் டாக்டர் படத்தின் ரிலிஸ் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் பல மாதங்களுக்கு முன்னதாகவே இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கிவிட்ட சன் தொலைக்காட்சி, இனிமேலும் பொறுக்க முடியாது என தீபாவளிக்கு நாங்கள் ஒளிபரப்பிவிடுவோம். நீங்கள் அதற்கு முன்னர் எப்போது வேண்டுமானாலும் ரிலீஸ் செய்துகொள்ளுங்கள் என டாக்டர் படக்குழுவுக்கு கறாராக நிபந்தனை விதித்துள்ளார்களாம்.