பும்ராவை பொதுவெளியில் சொல்ல முடியாத சொல்லால் தாக்கினார்கள்… ஷர்துல் தாக்கூர் ஆதங்கம்!

வியாழன், 16 செப்டம்பர் 2021 (16:30 IST)
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆண்டர்சன் பேட் செய்ய வந்த போது அவரை தாக்கும் விதமாக பூம்ரா தொடர்ச்சியாக பவுன்சர்களை வீசினார். இதனால் ஆண்டர்சன் கடுப்பாகினார். ஆனால் போட்டி முடிந்த போது பூம்ரா அவரிடம் சென்று தான் வேண்டுமென்றே செய்யவில்லை என மன்னிப்புக் கேட்க சென்ற போது ஆண்டர்சன் அவமானப் படுத்தினார். பின்னர் பூம்ரா ஐந்தாம் நாளில் பேட்டிங் செய்ய வந்த போது இங்கிலாந்து பவுலர்கள் அனைவரும் பவுன்சர் வீசி பூம்ராவை தாக்க முயன்றனர். ஆனால் பூம்ரா அதை சிறப்பாகக் கையாண்டு 36 ரன்கள் சேர்த்தார். அது வெற்றிக்கு மிகப்பெரிய காரணியாக அமைந்தது.

இந்நிலையில் அந்த சர்ச்சைப் பற்றி பேசியுள்ள ஷர்துல் தாக்கூர் ‘லார்ட்ஸ் டெஸ்ட்டின் தாக்கம் ஓவல் டெஸ்ட் வரை இருந்தது. ஆண்டர்சனுக்கு பவுன்சர் வீசியதற்காக பூம்ராவை இங்கிலாந்து வீரர்கள் பொது வெளியில் பகிரமுடியாத சொற்களால் வசைபாடினர். டெய்ல் எண்டர்கள் பேட் செய்யும்போது பவுன்சர்களை வீசுவது எல்லா நாட்டு பந்துவீச்சாளர்களும் செய்வதுதான். மற்றவர்கள் பாடிலைனில் பந்துவீசும்போது நாங்கள் ஏன் செய்யக்கூடாது. நாங்கள் வெற்றி பெறவே விளையாடுகிறோம். யாரையும் திருப்தி படுத்த அல்ல.’ என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்