‘மாநாடு’ ரிலீஸ் ஆனதால் ஓடிடியில் ‘அண்ணாத்த’ ரிலீஸ்!

வியாழன், 25 நவம்பர் 2021 (08:56 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூலை குவித்த நிலையில் இன்று முதல் ஓடிடியில் ரிலீசாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் இன்று முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடியிலும், நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் ரிலீஸாகியுள்ளது. ‘அண்ணாத்த’ படம் ரிலீசாகி முதல் நான்கு நாட்கள் மிகப்பெரிய வசூலைக் குவித்தாலும் அதன்பிறகு கனமழை காரணமாக வசூல் குறைந்தது என்பதும் கனமழை காரணமாக திரையரங்குகளுக்கு ரசிகர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று முதல் ஓடிடியில் ‘அண்ணாத்த’ படம் ரிலீசாகி உள்ளதை அடுத்து பெண்கள் உள்பட ரசிகர்கள் வீட்டிலிருந்தே ‘அண்ணாத்த’ படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்