விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய சன் பிக்சர்ஸ்

சனி, 20 மே 2017 (14:38 IST)
விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தின் பட்ஜெட் நூறு கோடி தாண்டியதால் லைகா நிறுவனம் பின்வாங்கியது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜய் படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது.


 

 
விஜய்யின் 62வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி ஏற்கனவே இரண்டு வெற்றி படங்களை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. கத்தி படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது. 
 
இதையடுத்து தற்போது விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடி. இந்த படத்தை தயாரிக்க இருந்த லைகா நிறுவனம் பட்ஜெட் 100 கோடி என்பதால் விலகிக்கொண்டது. விஜய் படம் 100 கோடி வசூல் செய்துள்ளது. இருந்தும் ஏன் லைகா நிறுவனம் பின் வாங்கியது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
 
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க முன் வந்துள்ளது. விஜய் நடித்த வேட்டைக்காரன், சுறா ஆகிய படங்களை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது விஜய் படத்தை நேரடியாக தயாரிக்க உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்