ரஜினிகாந்தின் 2.0 பிரம்மாண்ட வெளியீட்டிற்குப் பிறகு அவரது அடுத்த படமான பேட்ட சுடசுட பொங்கல் விருதாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ரஜினியோடு, விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சசிக்குமார், சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் என நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். இதனால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.
பேட்ட படத்தின் புரமோஷன்களை வேற லெவலில் செய்து வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த 2.0 படத்தின் வெளியீட்டுக்கு முன்பிருந்தே பேட்ட படத்தின் விளம்பரங்களை ஆரம்பித்து விட்டது. ரஜினியின் விதவிதமான கெட் அப்கள், மற்ற நடிகர்களின் தோற்றங்கள் என வாரத்திற்கு ஒரு அப்டேட் என மொத்த கோலிவுட் ரசிகர்களையும் தங்கள் பக்கம் கவர்ந்திழுத்து வருகிறது.