மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 25வது படம் ‘சீதகாதி’, இந்த படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்குகிறார்.
இப்படத்தில் அர்ச்சனா, பகவதி பெருமாள், ராஜ்குமார், மௌலி, மகேந்திரன், பார்வதி நாயர், ரம்யா நம்பீசன், காயத்ரி போன்ற நட்சத்திரங்களும் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா மேனன் தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.