’’ தற்கொலை முயற்சி’’ விஜய், சிம்பு படங்கள் குறித்து மருத்துவர் உருக்கமான கடிதம்!

செவ்வாய், 5 ஜனவரி 2021 (17:58 IST)
திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைகள் நிரப்பிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் ,ஈஸ்வரன் திரைப்படம் தியேட்டரில் 100% பார்வையாளருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறித்து, டாக்டர் ஒருவர் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
 

தமிழகத்தில் கொரோனாவால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் மட்டுமே அமர வேண்டும் என அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் தற்போது பொங்கலுக்கு மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் வெளியாகும் நிலையில் 100% பார்வையாளர்களை அனுமதித்து தமிழக அரசு. ஆனால் இதற்கு நெட்டிசன்கள் மத்தியில் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

உருமாறிய கொரோனா பரவி வரும் நிலையில் இப்படி ஒரு ரிஸ்க் எடுப்பதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ரசிகர்களை இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தள்ளியுள்ள விஜய்யும் எடப்பாடியும் தங்கள் குடும்பத்தோடு முதல் நாள் முதல் காட்சியை அமர்ந்து பார்ப்பார்களா என சமூகவலைதள நெட்டிசன்கள் வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவர் அரவிந்த் தனது சமூகவலைதளப் பகத்தில் கூறியுள்ளதாவது :
டியர் விஜய் சார், சிலம்பரசன் சார் மற்றும் மரியாதைகுரிய தமிழக அரசு, என்னைப் போன்ற மருத்துவர்கள்,போலீஸார், சுகாதார ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் சோர்வில் உள்ளனர்.
தற்போது பரவிவரும் கோரோனா தொற்றுப் பரவலைத்தடுக்க அனைவரும் உழைத்து வருகின்றோம். எங்களுக்கு தற்போது மூச்சுவிடக் கூட நேரமில்லை; ஆனால் சிலரது சுயநலம் மற்றும் பேராசைக்கான நாங்கள் பலிகடா ஆகவிரும்பவில்லை என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், பாண்டமிக் சூழல் இன்னும் முடியவில்லை. இந்த நிலையில் தியேட்டர்களில் 100% பார்வையாளர்களை அனுமதிப்பது என்பது தற்கொலை முயற்சி. இல்லைஇது கொலை. சட்டம் செய்பவர்களோ , சினிமா ஹீரோக்களோ கூட்டத்துடன் சேர்ந்து படம் பார்க்கப்போகத் தயாராகயில்லை; இப்போது அணையும் நிலையில் உள்ள தீயைத் தூண்விட வேண்டாமே! உயிருக்கு அச்சப்பட்டுக்கொண்டு வியாபாரம் செய்கிறார்கள்.அதனால் நாம் தான் நம்மைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். நாம் இன்னும் ஆபத்தில் இருக்கிறோம்…இதுகுறித்து நான் அறிவியப்பூர்வமாக விளக்கலாம் என நினைத்தேன். ஆனால் இதனால் என்னைவிளையப்போகிறது என எனக்கு நானே கேட்டுக்கொண்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
 

God is Everything !
என உறுதியாக நம்பும் மகனின் தாயே தெய்வமாகிவிட்டதால்.... இன்னும் எல்லா புகழுக்கும் அவரே ஆசி வழங்குவார்.நம் ஊருக்குக் கிடைத்த உலகப் பெருமையை உளமார வாழ்த்துவோம். #HBDARR54#HBDARRahman#HappyBirthdayARRahmam pic.twitter.com/W8XR1nCHbk

— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 5, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்