இந்நிலையில் சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் படத்தில் இருந்து விலகினார். ஆனால், படக்குழுவோ ஸ்ருதி விலகவில்லை அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டார் என கூறியது. ஸ்ருதி விலகப்பட்டதற்கான காரணம் நாகரிகம் கருதி வெளியிட முடியாது எனவும் படக்குழு அறிவித்தது.
எனவே, படத்தின் ஹீரோயின் வேட்டை நடைபெற்று வருகிறது. அனுஷ்கா மற்றும் நயன்தாராவிடம் பேசி பார்க்க படக்குழு முடிவு செய்து அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இதனை பற்றிய தகவல் இன்னும் எதும் வெளியாகவில்லை.
எனவே, ஸ்ரீதேனாண்டாள் ஸ்டுடியோஸின் சிஇஓ இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், படத்திற்கு வேறு ஒரு நடிகையை தேர்வு செய்துவிட்டோம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என தெரிவித்துள்ளார்.