திரைத்துறையில் ஒரு சூப்பர் ஸ்டாரின் சகாப்தம் முடிந்துவிட்டது: தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

சனி, 29 ஜூலை 2023 (15:39 IST)
திரைத்துறையை பொருத்தவரை ஒரு சூப்பர் ஸ்டாரின் சகாப்தம் முடிந்துவிட்டது என பிரபல தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
அவர் இது குறித்து கூறியதாவது: திரைத்துறையில் ஒரு சூப்பர் ஸ்டாரின் சகாப்தம் முடிந்துவிட்டது. ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் ஒரு வர்த்தகம் உள்ளது. ஒவ்வொரு படங்களின் மதிப்பு மற்றும் அதன் வெளியீட்டு தேதி, கதை களம், போட்டி ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடும். இதை திரையுலகம் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் சந்தை மதிப்பு உயரும்
 
 இதற்கு சிறந்த உதாரணம் தெலுங்கு துறையில் உலகம் என்று கூறலாம். அந்தந்த திரையுலகின் நட்சத்திரங்கள் ரசிகர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். இதை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த இந்திய திரைப்படத் துறையும் சிறந்த தயாரிப்பு தரத்திற்கு உயரும்என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.  
 
ரஜினிகாந்த் இன்னும் சூப்பர் ஸ்டார் தான் என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு எவ்வாறு கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்