6 ஆயிரம் ரூபாயில் ஏர்லைன் கம்பெனி சூரத்தனமான "சூரரைப் போற்று" டீசர்!

செவ்வாய், 7 ஜனவரி 2020 (17:19 IST)
சூர்யா நடிக்கும் ’சூரரைப் போற்று’ படத்தின் டீசர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகியுள்ளது. 
 
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ’சூரரைப்போற்று’. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிக்கிறது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்ககளில் நடித்துள்ளனர்.
 
ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அண்மையில் அடுத்தடுத்து வெளிவந்த இப்படத்தில்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா பைலட் ஆபீஸராக நடித்துள்ளார். 
 
ஏர்லைன் கம்பெனி ஆரம்பிப்பதை கனவாக எண்ணி அதற்காக பல போராட்டங்களை எதிர்கொண்டு பல எதிரிகளை எதிர்த்து எப்படி தன் இலட்சியத்தை அடைந்தார் என்பதே இப்படத்தின் மைய கருவாக கொண்டு எடுத்துள்ளனர். சூர்யா ரசிகர்களிடம் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களை இந்த டீசர் வெகுவாக ஈர்த்துள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்