இந்நிலையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை தொடர்ந்து 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளுக்கு மட்டுமே இந்த இடஒதுக்கீடு பொருந்தும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.