சூர்யாவின் ‘சூரரை போற்று’ படத்தின் அதிரடி அறிவிப்பு

புதன், 1 ஜனவரி 2020 (10:16 IST)
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ’சூரரைப் போற்று’ திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று காலை 10 மணிக்கு வெளியாக உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அதன்படி சற்றுமுன்னர் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
’சூரரைப் போற்று’ படத்தின் செகண்ட்லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக ஜிவி பிரகாஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியாகும் சூரரைப் போற்று படத்தின் செகண்ட்லுக் சூர்யா ரசிகர்களுக்கான புத்தாண்டு பரிசாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
சுதா கொங்காரா இயக்கத்தில் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ளனர்.  இந்த படம் நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

#SooraraiPottru@Suriya_offl SudhaKongara @nikethbommi @Aparnabala2 @editorsuriya @jacki_art @rajsekarpandian @guneetm @SuperAalif @2D_ENTPVTLTD @SakthiFilmFctry @gopiprasannaa pic.twitter.com/m6Wrpi1f3x

— G.V.Prakash Kumar (@gvprakash) January 1, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்