ஈட்டி இயக்குனரின் படத்தில் சிவராஜ் குமார் & துல்கர் சல்மான்?

திங்கள், 18 செப்டம்பர் 2023 (07:29 IST)
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜ்குமாரின் மூத்த மகனான சிவராஜ், கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் கன்னடம் தாண்டி வெளிமொழி படங்களில் அவர் நடித்ததில்லை.

சமீபத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயம் ஆனார். படத்தில் அவரின் காட்சிகள் ரசிகர்களால் பெரியளவில் ரசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் ஈட்டி படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் ரவி அரசு, இப்போது சிவராஜ் குமாரை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் நவம்பர் மாதத்தில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க துல்கர் சல்மானிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்