சிஎஸ்கே அணியில் இந்த 3 வீரர்கள்: சிவகார்த்திகேயன் விருப்பம்!

வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (17:30 IST)
2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் நாளை நடைபெற இருக்கும் நிலையில் சிஎஸ்கே அணியில் இந்த மூன்று வீரர்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என சிவகார்த்திகேயன் பேட்டி அளித்துள்ளார்.
 
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் நடத்திவரும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த சிவகார்த்திகேயன் நம்ம சென்னை அணியில் நம்ம பசங்க இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் அதில் குறிப்பாக அஸ்வின், நட்ராஜ் மற்றும் ஷாருக்கான் ஆகிய மூவரும் இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் இந்த மூவரையும் நான் மஞ்சள் நிற ஜெர்ஸியில் பார்க்க ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
 
ஏற்கனவே அஸ்வின் சிஎஸ்கே அணியிலிருந்து அதன்பின்தான் வெவ்வேறு அணிகளுக்கு மாறினார் என்பது தெரிந்ததே. தற்போது ஹைதராபாத் அணியில் இருக்கும் நடராஜனை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் அதேபோல் அதிரடி பேட்ஸ்மேன் ஷாருக்கான் சிஎஸ்கேவில் இணைவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்  
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்