சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் ரிலீசுக்கு ஏற்கனவே தயாராக இருந்த நிலையில் இந்த படத்தின் சரியான ரிலீஸ் தேதியை எப்போது உறுதி செய்வது என படக்குழுவினர் காத்திருக்கின்றனர். ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் மீண்டும் எப்போது திரையரங்குகள் திறக்குமோ, அப்போதுதான் இந்த படம் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது
கொரொனா இரண்டாம் அலைப் பரவலால் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன. தற்போது இந்தக் கொரொனா பாதிப்புகள் குறைந்து தமிழகம் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.