குழந்தைகளுக்கான ‘குரங்கு பெடல்’ திரைப்படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன்!

vinoth

வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (07:08 IST)
தமிழ் சினிமாவில் மதுபானக் கடை என்ற வித்தியாசமான திரைப்படம் மூலமாக அறிமுகமானார் இயக்குனர் கமலக் கண்ணன். இந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது.

இதையடுத்து அவர் சிபிராஜ், ஆண்ட்ரியா மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் நடிப்பில் வட்டம் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆனது. இந்த படம் விமர்சன் ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதையடுத்து அவர் குழந்தைகளை வைத்து குரங்கு பெடல் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை சிவகார்த்திகேயன தன்னுடைய ‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்” நிறுவனம் மூலமாக வெளியிடுகிறார். இந்த படத்தின் அறிமுக டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

சைக்கிள் வாங்கி கற்றுக்கொள்ள ஆசைப்படும் ஒரு சிறுவனின் ஆசையை மையமாகக் கொண்டு இந்த டீசர் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் கோடை விடுமுறையை முன்னிட்டு கோடையில் இந்த படம் வெளியாகும் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்