படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் வித்யுத் ஜம்மால், விக்ராந்த் மற்றும் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 70 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் செய்யலாம் எனப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் மற்றொரு படமான பராசக்தியைக் கொண்டுவர உள்ளதாக தகவல்கள் பரவுவதால் இப்போது SK 23 படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதியைக் குறிவைப்பதாக சொல்லப்படுகிறது.