சூர்யா படத்தின் நாயகி இவர்தான்… ராஷ்மிகாவைப் பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன் பட நடிகை

புதன், 20 ஜனவரி 2021 (18:38 IST)
சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நாயகியாக பிரியா அருள்மோகன் நடிக்க உள்ளாராம்.

சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளது உறுதியாகிவிட்டது.. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாம். படத்துக்கான மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்துக்கான பின் தயாரிப்பு வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. ஆனால் படப்பிடிப்பு எப்போது என்பது குறித்து எந்த செய்தியும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் இப்போது வாய்ப்பை தட்டிப் பறித்துள்ளார் டாக்டர் படத்தில் நடித்துள்ள பிரியா அருள்மோகன்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்