தலைவர் 170 படத்தில் அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் இதுதானா? வெளியான தகவல்!

செவ்வாய், 31 அக்டோபர் 2023 (07:46 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. இன்று முதல் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலியில் நடந்து முடிந்த நிலையில் இப்போது இரண்டாம் கட்ட காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டு வருகின்றன. மும்பையில் ஷூட்டிங் நடந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ரஜினி மற்றும் அமிதாப் பச்சன் ஆகிய இருவரும் இருக்கும் புகைப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணையத்தில் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் அமிதாப் பச்சன் ஒரு வழக்கறிஞர் வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினி கதாபாத்திரத்துக்கு உதவும் ஒரு மூத்த வழக்கறிஞராக அமிதாப் பச்சன் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்