ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. இன்று முதல் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.
அதையடுத்து இப்போது சென்னையில் ஒரு ஸ்டுடியொவில் ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர் ஞானவேல். இந்த ஷுட்டிங் முடிந்த பின்னர், கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் அடுத்த கட்ட ஷூட்டிங் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதோடு படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடிய உள்ளதாக சொல்லப்படுகிறது.