அவர் வாய்ஸ்லதான் பேசவே ஆரம்பிப்பேன்! – சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

புதன், 10 நவம்பர் 2021 (12:15 IST)
பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசின் சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியோருக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் பட்டிமன்ற பிரபலமும், பேராசிரியருமான சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ வழங்கப்பட்டது. அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சாலமன் பாப்பையா பத்மஸ்ரீ பெற்றது குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் “கல்லூரி நாட்கள் முதல் என் பல குரல் நிகழ்ச்சியை உங்கள் குரலில்தான் தொடங்குவேன்,என்றும் உங்கள் ரசிகனாக என் மனமார்ந்த வாழ்த்துகள் அய்யா” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்