ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘ஸ்பைடர்’ படமும், அன்றுதான் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகேஷ் பாபு தமிழில் முதன்முறையாக அறிமுகமாகும் இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில், பாலா இயக்கிவரும் ‘நாச்சியார்’ படமும் அதே நாளில் வெளியாவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
ஜோதிகா ஹீரோயினாக நடித்துவரும் இந்தப் படத்தில், ஜி.வி.பிரகாஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு மட்டுமே பாக்கியிருக்கும் சூழலில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கிவிட்டன. இப்படி பெரிய படங்கள் சிவகார்த்திகேயன் படத்துக்குப் போட்டியாக அமைந்துள்ளதால், அவர் படத்துக்கு அதிகமான தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.