சிவகார்த்திகேயன் நடிக்க இருந்த படத்தை கையில் எடுக்கும் ஆர் ஜே பாலாஜி!
புதன், 19 ஜூலை 2023 (07:43 IST)
சில ஆண்டுகளுக்கு முன்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அட்லியின் உதவியாளர் அசோக் குமார் என்பவர் இயக்க உள்ள சிங்கப்பாதை என்ற படத்தினைப் பற்றிய தகவல்கள் வெளியாகின. இந்த படத்தை கே ஜே ஆர் ராஜேஷ் தயாரிப்பதாக இருந்தார்.
ஆனால் சில காரணங்களால் அந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் இப்போது அந்த படத்தில் இப்போது ஆர் ஜே பாலாஜி நடிக்க பேச்சுவார்த்தைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தை ஐசரி கணேஷ் தன்னுடைய வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.