சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை பற்றிய புதிய அப்டேட்

வியாழன், 5 டிசம்பர் 2019 (23:41 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ’நம்ம வீடு பிள்ளை’ திரைப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து பி.ஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படம் வரும் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படமும்  மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படமான ’டாக்டர்’ படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 
நெல்சன் இயக்கும் இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரடொக்சன்ஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து  தயாரிக்கின்றன. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனன் என்பவர் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் வில்லனாக வினய் நடிக்கவுள்ளார்.  விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும், நிர்மல் படத்தொகுப்பு பணியில் ஈடுபட இருப்பதாகவும், கிரண் கலை இயக்குனராகவும், அன்பறிவ் சண்டை பயிற்சி இயக்குனராகவும், பல்லவி சிங் காஸ்டியூம் டிசைனராக பணி புரிவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்