சிவகார்த்திகேயேன்-ஏ.ஆர்.முருகதாஸ் பட புதிய அப்டேட்

சனி, 5 ஆகஸ்ட் 2023 (13:48 IST)
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன். இவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில், மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் கடந்த 14 ஆம் தேதி வெளியான படடம் மாவீரன்.
இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ரூ.75 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இப்படத்தை அடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் 'எஸ்கே21' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

இந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில், அனிருத் இசையில்   புதிய படம்  உருவாகவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிர்னால் தாகூர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்