திருவண்ணாமலையில் மனைவியுடன் கிரிவலம் வந்த அருண் விஜய்...

வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (14:00 IST)
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் அருண் விஜய். இவர் திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்டார்.

தமிழ் சினிமாவின் பிரபல  நடிகர் அருண்விஜய். இவர் நடிப்பில், ஹரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் யானை. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இவர் நடித்து வரும் மிஷன் என்ற படம் விரைவில் தியேட்டரில் ரிலீஸாகவுள்ளது.  இப்படத்தை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த நிலையில், பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த அதே கேரக்டரில் அருண் விஜய் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் அருண் விஜய் தனது மனைவியுடன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ராஜகோபுரம் முன்பு அண்ண்ணாமலையாரை வணங்கி, கோயிலை ஒட்டிய 14 கிமீ மலையை சுற்றி  நேற்று நள்ளிரவு தன் ரசிகர்களுடன் கிரிவலம் வந்தார்.

இதுகுறித்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்