கலைஞர் & சிவாஜி கணேசனின் ‘கல்ட்’ படத் தலைப்பை வைக்கிறதா ‘சிவகார்த்திகேயன் 25’ படக்குழு?

vinoth

வெள்ளி, 24 ஜனவரி 2025 (07:03 IST)
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருந்த புறநானூறு திரைப்படம் சூர்யாவின் தலையீட்டால் கைவிடப்பட்டது.  அந்த கதை இந்தி திணிப்பு எதிர்ப்பைப் பற்றிய படம் என்பதால் அதில் நடிக்க சூர்யா தயங்கியதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் சூர்யா நேரடி இந்திப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் அதே கதையை சிவகார்த்திகேயனை வைத்து டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக சுதா கொங்கரா இயக்க உள்ளார். அது சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக உருவாகி வருகிறது. படத்தில் முக்கிய வேடங்களில் ஜெயம் ரவி, அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் நடிக்கின்றனர். ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு ‘பராசக்தி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1952 ஆம் ஆண்டு கலைஞர் வசனத்தில் சிவாஜி கணேசன் அறிமுகமான ‘பராசக்தி’ திரைப்படம் இன்றளவும்  பேசப்படும் அரசியல் சினிமாவாக உள்ளது. இந்நிலையில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் சம்மந்தப்பட்ட கதைக்கு அந்த தலைப்பை மீண்டும் பயன்படுத்த உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்