சிவா - அஜித் இருவருமே ஒரே மாதிரியான குணம் கொண்டவர்கள்- ஹெச்.வினோத்

செவ்வாய், 28 டிசம்பர் 2021 (18:25 IST)
இயக்குனர் ஹெச்.   வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் – ஹூமா குரேஷி  நடிப்பில் உருவாகிவரும் படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி வைரலானது.  அதேபோல் இப்படத்தில் மேக்கிங் வீடியோ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 

இந்நிலையில் வலிமை படத்தின் டிரைலரை வரும் புத்தாண்டு தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இ ந் நிலையில் இப்படத்தின் இயக்குநர் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது, நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குனர் சிவா குறித்து அவர் பேசியுள்ளார். அதில், சிவா சாரும் அஜித் சாரும் இருவருமே ஓரே மாதிரியான சிந்திப்பவர்கள் ; ஒரே மாதிரியான  குணம் கொண்டவர்கள். இருவருமே குடும்பத்திற்கு மரியாதை தருபவர்கள் எனத் தெரிவித்துள்ளார். மேலும், அஜித் சாருக்கு வலியைத் தாங்கும் சக்தி அதிகம் . அவரிடமிருந்து அதைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

எனவே அஜித்குமார் மற்றும் சிவா இணைத்து வீரம், விவேகம், விஸ்வாசம்,வேதாளம் உள்ளிட்ட படங்களை இணைந்து பணியாற்றியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்