இந்நிலையில் கனா படத்தை தயாரித்தது ஏன் என்பது குறித்து தனியார் சேனல் ஒன்றுக்கு சிவகார்த்திகேயன் பேட்டி அளித்தார். அவருடன் ‘கனா’ படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ், கோலமாவு கோகிலா இயக்குநர் நெல்சன் வந்திருந்தனர்.
அவர் அப்பவே படம் பண்றதாக இருந்தது. அதற்கான கதை விவாதங்களில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். சிலநாட்களில், என் கல்லூரி நண்பனும் ‘கனா’ படத்தின் இயக்குநருமான அருண்ராஜா காமராஜையும் நெல்சனிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினேன். அவனையும் அவர் சேர்த்துக்கொண்டார்.
அவரிடமிருந்துதான் சினிமா பற்றிய புரிதல்கள் எங்களுக்குக் கிடைச்சது. பாடல்கள் எழுதிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்த அருண்ராஜாவை, டைரக்ட் பண்ணுடா என்று சொன்னதால், இந்த ‘கனா’ கதையைச் சொன்னான். அதில் நான் கெஸ்ட் ரோலில் வரும் போர்ஷன் பகுதி வந்தது. பார்த்தால், அந்தக் கேரக்டருக்கு நெல்சன் திலீப்குமார் என்று அருண் பெயர் வைத்திருந்தான். எனக்கும் அருணுக்கும் நெல்சன் குரு ஸ்தானம். எனவே குருவுக்குச் செய்யும் மரியாதையாக அந்தக் கேரக்டருக்கு அவருடைய பெயரை வைத்திருந்தது மனதில் நிறைவைத் தந்தது என்றார்.