தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடக்கவுள்ள சூழலில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கும் திமுக அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரை அமர்த்தியுள்ளது. அவரது ஐபேக் நிறுவனம் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழகம் முழுவதும் உள்ள தொகுதிகளில் எம்.எல்.ஏ வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை திமுக தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஐபேக் நிறுவனம் தொகுதி ரீதியாக ஆய்வுகளை மேற்கொண்டு குறிப்பிட்ட தொகுதியில் கவனம் பெறாத, செல்வாக்கு இல்லாத திமுக பிரபலங்களின் பட்டியலை தயாரித்துள்ளதாம். அதில் உள்ளவர்களுக்கு இந்த தேர்தலில் சீட்டுகள் வழங்கப்படாது என்றும், அந்த பட்டியல் ஸ்டாலின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.